என் தூக்கத்தை சில நாட்களாக தொலைத்தெடுக்கும் கேள்விகள்....
என் தூக்கத்தை சில நாட்களாக தொலைத்தெடுக்கும் கேள்விகள்....
1. ஏன் என் சமுதாயத்திற்கு நாட்டின் மீது அக்கறை இன்றி போனது..?
2. எல்லோரும் பணம் தேடி அலையும் பதுமைகளாகிப் (பொம்மை) போனது ஏன்?
3. தனி மனித ஒழுக்கமே சமூக ஒழுக்கம் என்பதை மறந்து போனது ஏன்?
4. எல்லா சமுதாய மாற்றங்களும் கேள்விகள் கேட்பதிலிருந்தே தொடங்கி இருக்கிறது. தனக்கான உரிமைகளைக் கூட கேட்டு பெற இயலாதவர்களாக மாறிப்போனது ஏன்?
5. 98% இருக்கும் நாம் ஏன் இன்னும் 2% அரசியல்வாதிகளையே குறை பேசி வருகிறோம்?
6. அரசியலில் யாருமே நல்லவர்கள் இல்லை என பேசும் நாம் நல்லவர்கள் தானே... ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது? பலி போடுவதும் குறை கூறுவதும் மட்டும் தான் நம் வேலையா?
7. Facebook - ல் பேசும் நேரம் அளவுக்கு கூட பெற்றோரிடம் பேசுவதில்லையே ஏன்?
8. குடும்ப உறவுகளை மறந்து இந்த உலகில் நீங்க சாதிக்க போவது என்ன?
9. குடும்பமும் விவசாயமும் தானே நம் பலம். இரண்டையும் விடுத்து எங்கே செல்ல முயற்சிக்கிறோம்?
10. இயற்கையை பகைத்துக்கொண்டு வாழ்ந்துவிட முடியும் என எப்படி முட்டாள் தனமாக நம்ப முடிந்தது நம்மால்...?
11. எல்லா விசயத்திலும் நாகரீகம் பேசித்திரியும் நாம் இன்னும் சாதிக்கும் மதத்திற்கும் அடிமையாகி இருப்பது எதனால்?
12. நம்மைப்போல எல்லா சக மனிதனும் சமம் தானே... இதில் சாதிக்கும் மதத்திற்கும் என்ன வேலை....?
13. மனித மனதைக்கூட பண்படுத்த இயலாத மதம் தேவை தானா...?
14. பிறரிடம் கையேந்தி வாழ்வதை விட மார்பில் வேல் பாய்ச்சி சாவது மேல் என வாழ்ந்த என் இனம் இன்று தன் ஓட்டை விற்க கையேந்துவது ஏன்?
15. அப்படி ஓட்டோடு சேர்த்து தன்னையும் விற்க முடிகிறது என்றால் நாம் செய்யும் வேலைக்கு என்ன பெயர்?
இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.....
போதும் நண்பர்களே...
இனியேனும் சற்றுநேரம் சமுதாயத்தைப் பற்றி யோசிப்போம்...
நம்மால் முடியாதது யாராலும் முடியாது என நம்புவோம்.
தனி மனித மேம்பாடே சமூக மேம்பாடு என்பதை உரக்க பேசுவோம்.
நாம்
இனி ஒரு விதி செய்வோம்...!