அன்பிற்கினிய சொந்தங்களுக்கு...

அன்பிற்கினிய சொந்தங்களுக்கு...

நாம் வாழ்க்கையில் அதிகம் மறந்துபோவது நம்மைப்பற்றித் தான். சுயம் அறியாமல் போனதன் காரணம் நாமல்ல. நம்மை வழிநடத்தும் கருத்துக்குவியல்கள். ஆம். நம்முடைய செயல்பாடுகளை நமது கருத்துக்களே தீர்மானிக்கின்றன. நல்ல கருத்துகள் நம்மிடம் வளராமல் போனதன் காரணம் நாம் ஆன்மிகம் தண்டி பயணிக்க தொடங்கியது தான்.

ஆன்மிகம் என்பது ஒரு மதம் பற்றியதோ, ஒரு சாதிப்பற்றியதோ, ஒரு இனம் பற்றியதோ அல்ல. ஆன்மிகம் மனிதம் பற்றியது. எல்லா மதத்தின் ஆன்மீகவாதிகளும் போதித்தது ஒன்று தான் - அன்பு. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள், அரவணைத்து வாழுங்கள் என்றே எல்லா மதங்களும் சொல்லி இருக்கின்றன.

சாதி மத பிரிவினைகள் எல்லாம் மூட நம்பிக்கைகள். மதங்களை கடந்த மனிதமே நம் குறிக்கோள். நம்மால் யாருக்கும் உதவ முடியாது; சேவை மட்டுமே செய்ய இயலும். புனிதமான சேவை மூலம் மனிதத்தை வளர்த்தெடுப்போம். - இது சுவாமி விவேகனந்தரின் வாக்கு.

ஆனால் -

இப்போது தான் ஒருவர் எல்லா சாதிகளையும் ஒன்றிணைப்பதாக சொல்லிக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக சுற்றி வருகிறார். தீவிரவாதம் எல்லா மனிதநேய கோட்பாடுகளுக்கும் அப்பாற்ப்பட்டது. ஆனால் இன்றும் கூட அதற்கு மதச்சாயம் பூசிக்கொள்ளும் அவலம் எம்மண்ணில் தொடர்கிறது. இதனை அம்மதம் சார்ந்த பிள்ளைகளே மார்தட்டி ஏற்றுக்கொள்ளும் அவலமும் அகன்ற பாடில்லை.

போதும் நண்பர்களே...

ஆன்மிகம் நோக்கி பயணித்தாலன்றி மனித குலம் காக்க மாற்று வழி இல்லை.
நாம் எம்மதம் ஆயினும் அறிவோம் அம்மத ஆன்மிகம். ஏனெனில் -
எல்லா மத ஆன்மீகமும் ஒன்றையே சொல்கின்றன - சக மனிதனை நேசி.

நண்பா... நீ யோசி.

எழுதியவர் : (23-Feb-13, 4:34 pm)
பார்வை : 109

மேலே