தோற்பது யார்?
..
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய்"-பழமொழி..ஆகவே நீ நினைப்பது நலமாக இருக்குமானால் நடப்பதுவும் நலமாகவே நடக்கும்.எந்த ஒரு செயலையும் உன்னால் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என உன்னையே நீ நம்பித் தொடங்கினால் நிச்சயமாக அது பரிபூரணமாகும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
சில சமயங்களில் சிலரைப் பார்த்து சிலர் வினையாகவோ அல்லது வேடிக்கையாகவோ கேட்பதுண்டு,"உன்னை நம்பலாமா?"என்று.சிலரிடமிருந்து சரியான பதில்களும் வருவதுண்டு.அதாவது,""முதலில் உன்னையே நீ நம்பு""என்பார் பதிலுக்கு.ஆகவே முதலில் உன் மீது உனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் .உன்னால் முடியும் எனத்துணிந்து விட்டாலே உனக்குள் இருக்கும் இயல்பான பலம்,துணிச்சல்,வேகம் யாவும் இரட்டிப்பாகிவிடுகின்றன
. இப்போது இதிகாசம் கூறும் பாடம் ஒன்றை நினைவு கூர்வோம்.இராமாயண
வாலியை கண்முன்னே கொண்டு வருவோம்.எதரிகளை எவ்வாறு அவன் எளிதில் வென்றான்எதிரிகள்அவன் முன்னே என்ன ஆனார்கள்?அவனுக்குள்ளிருந்த மாயம் என்ன?மந்திர சக்தி என்ன?என்று ஆராய்ந்து பாரப்போமானால் அவனுக்குள்ளிருந்த நம்பிக்கையும்,துணிச்சலுமேயன்றி வேறொன்றுமில்லை என்பதுதான் உண்மையான உண்மை,அந்த நம்பிக்கையும் ,துணிச்சலும்தான் எதரிகளிடம் ஐயத்தையும்,அச்சத்தையும் ஏற்படுத்தி எதிர்ப்பவனிடமிருந்த பாதிப் பலத்தைப் பறித்துக் கொடுத்ததென்றால் அது மிகையாகாது.
வாலியின் அபாரமான துணிச்சலும் அசைக்கமுடியாத நம்பிக்கையுந்தான் எதிரியும் அச்சப்படும்படியானஒரு அசுரத்தனமான தோற்றத்தை அவனுக்களித்தது.அந்த அற்புதமான தோற்றந்தானஎதிரியிடத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்பி அச்சம் ஏற்படச் செய்தது.அப்படித்தான்வாலியின் முன் எதிரி தன் பலத்தில் பாதியை இழந்து விடுகிறான்.அந்தப் பாதியேவாலியின் பலத்தைக் கூடுதலாக்கிவிடுகிறது.இதுதான் வாலி தன் எதிரிகளையெல்லாம் வென்றதன் இரகசியம்.அதனால்தான் எல்லாம் வல்லஇராமன் கூட மறைந்திருந்துதான் தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.வாலியிடம் வேறு மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை
ஆகவே முடியும் என்ற துணிச்சல் ஒரு பலம்,முடிப்பேன் என்ற நம்பிக்கை ஒரு பலம் மற்றும் உனக்குள் ஒளிநதிருக்கும் இன்னொரு இயல்பான பலம் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஊதிப்புடைத்து உன்னை ஒரு மகா பலசாலியாக்கி விடும்.அப்போது உனக்கு எதிரே நிற்கும் எத்தனை பெரிய செயலானாலும் அது கூனிக்குறுகி மிக அற்பமாகிவிடும்.இப்போது நீ அதனை முடிப்பதில் எந்தக் கடினமும் இருக்காது.உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.உன்னை நீயே நம்பு.எல்லாம் நலமாக முடியும்.தோற்பது யார்?