என்று தீரும் இந்த அடிமையின் மோகம்....?
18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஜனவரியில் நாட்டின் தங்கம் இறக்குமதி 100 டன்னாக அதிகரித்துள்ளது. - செய்தி.
இந்தியா ஏழைகள் வாழும் நாடு என யார் சொன்னது. இது பணக்காரர்கள் வாழும் ஏழை நாடு. எதையுமே வரைமுறைப்படுத்த தெரியாத அரசாங்கத்தினாலேயே நாம் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறோம். ஏற்றுமதியை தடைசெய்யும் எம்நாடு இறக்குமதியை தாராளமாக அனுமதிப்பது தான் கொடுமையிலும் கொடுமை. உலகப் போர்களின் போதெல்லாம் உலகம் முழுக்க இழவு பார்த்திருக்க, இங்கு நாம் மட்டுமே உழவு பார்த்து உலகு காத்தவர்கள். ஆனால் இன்று எவன் எவனோ எம்மண்ணை சந்தையாக்கி வியாபாரம் செய்கிறான்.
நம் வியாபாரி நசிந்து போனதற்கு காரணம் அரசாங்கமோ, அந்நியனோ அல்ல. நாம் தான். அந்நிய பொருட்களின் மீது மோகம் கொண்ட ஒரு நாடு என்றும் அடிமையாகவே இருக்கும் என்கிறான் ஒரு ரஷ்ய அறிஞன்.
இதையெல்லாம் சிந்தித்து தீர்வுகாண வேண்டிய எம் இளைஞர்கள் முகப்புத்தகத்திலேயே(Facebook) மூழ்கிப்போனது தான் மீளா சோகம்.
என்று தீரும் இந்த அடிமையின் மோகம்....?