இளைய சூரியனே எழு........

கனவுகளின்
இடைவெளிகளில்
நசுங்கிக் கிடக்கும்
நண்பனே எழு!!!!!!!!!!!!

நீ போக
வேண்டிய தூரம்
இன்னும் நிறைய இருக்க
புறப்பட்ட இடத்திலேயே
கிடக்கிறாயே ....
என்ன இது
உன் பூ முகத்தில்
சோம்பலான விலாசம் !!!!!

பதில் தேட வேண்டிய ...நீ
வெறும் கேள்விக் கிண்ணத்திலேயே
விழுந்து கிடக்கிறாயே !!
உன் கால்களால் நீ
நடக்கும் வரை - உன்னை
பல்லக்குகள் பரிகாசம் தான் செய்யும்!

நீ எழுந்து நின்றால்
எவரெஸ்ட் கூட
உன் இடுப்பளவு தான் .
என்ன உன் பார்வையில்
ஆச்சரியம் !!!!!
நீ - நிற்கப் போவது
நம்பிக்கை என்ற
இமயமானால் ..........

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Feb-13, 11:30 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 120

மேலே