சீர்தூக்கி
சூரியனைக் கொண்டு கூடைபந்து விளையாடும்
சீரியத் தலைமகனது கால்கள் பூமிபந்தில்
தாவி யுதைத்து விளையாடும் அழகுதனை
மேவுமென் கண்கள் கனவில் நீண்டது
நிலவை நிவனளப்பான் விண்மீனை விரைந்தெடுத்து
நிறுத்தி யாடுபுலி யாடுவான் யாண்டும்
நிலைத்து நில்லாது மின்னலை யுருட்டி
நற்தாயம் விளையாடி வெல்வான் மேகமிரண்டு
தற்காப்பில் இணைந்து முழங்கும் இடிதனை
இறுக்கிப் பிடித்து கருஞ்சிப்பான்
காலத்தைக் குடைந்து சீவிதத்தைக் கடைந்து
ஞானத்தை யடைந்து தேகத்தை இரைத்துப்
போவதை கடந்து பார்க்கின் விழித்துண்டேன்
பாதையாகும் கனவுதனை பார்