நானென்ன....? நீயென்ன.... ?

இவ்வுலக வாழ்வில்-நீ
வறுமையில் வாடினாலும்
செல்வத்தில் புரண்டாலும்
துன்பத்தில் இளைத்தாலும்
இன்பத்தில் திளைத்தாலும்
அழகான பெயர் கொண்டாலும்-பலர்
அன்பாய் உன்னை அழைத்தாலும்
பல புனைப்பெயர் கொண்டு
புகழின் உச்சியில் அமர்ந்தாலும்
சோதிட, எண் கணித முறைப்படி
முயன்று ஏதோ ஓர் முறையோடு
முதல் எழுத்தை மாற்றிக்கொண்டாலும்
நாசி வழி வெளிவந்த காற்று
உட்செல்லாவிடில் உனக்கு மரணமே
அதன் பின் உன் பெயர் பிணமே
இறுதியில் வசிக்கபோவது மண்ணின் மனமே
இதில் நானென்ன...?
நீயென்ன.... ?
-PRIYA