மதுவெனும் மாயக்கொள்ளையன்

வெள்ளையனே வெளியேறு
என்ற முழக்கம் ஒய்ந்து விட்டது !

மது எனும்
மாயக் கொள்ளையனே வெளியேறு
என்ற முழக்கம் துவங்கி விட்டது !

மதுவே !!

வெள்ளையனோ எம்
பாரதத்தை ஆக்ரமித்தான் !
ஆனால் நீ
பாரை(உலகத்தை) அல்லவா ஆக்ரமிக்கிறாய் !!

வெள்ளையனோ எம்
உரிமைகளை கொள்ளையடித்தான் !
ஆனால் நீ
உயிர்களை அல்லவா கொள்ளையடிக்கிறாய் !!

மதுவே !!

சாலை விபத்துக்களில்
உயிர்களை ருசித்தாய் !

சோலையான இல்லறத்தில்
சுகநலம் கெடுத்தாய் !

மாலைநேரக் கேளிக்கையில்
மையமாய் நீயமர்ந்தாய் !

காளையர் உனைக் கையிலேந்த
களிநடனம் புரிந்தாய் !

ஒன்றை மட்டும் மறந்தாய்,
யாரும் எம் தேசத்தை
நிரந்தரமாக ஆள முடியாது !

அஹிம்சையால்
அறியாமைத் துயில் நீக்கி
அயலானை நண்பனாக
அனுப்பி வைத்த
தேசமிது !!

நீ தரும் மயக்கமெனும்
துயில் எம்மாத்திரம் ?

எம்மவர்
துயில் கலைந்தால் நீ
துரத்தப்படுவது திண்ணம் !

மனம் கெடுத்தாய்,
மானம் கெட அனுமதியோம் !

நாகரீகமானாய்,
நரகம் ஆக்க அனுமதியோம் !

கலைவிழாவில் புகுந்தாய்,
கலாச்சாரம் கெட அனுமதியோம் !

மது எனும்
மாயக் கொள்ளையனே வெளியேறு !!!

எழுதியவர் : ஜீ ஜி (27-Feb-13, 10:32 am)
சேர்த்தது : jgeegiy (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 236

மேலே