இருட்டின் நிழலில்

எதிரில் காதலன்
வீட்டை மறந்தாள்
மடியில் பெண்மகள்
காதலன் மறந்தான்...
எதிரே உலகம்
ஏளனம் செய்ய
பாலில்லா மார்நோக்கி
பிள்ளையின் கைகள்...
கைநீட்ட மறுத்த
கைகள் இன்றும்
விடியலை நோக்கி
உறங்காத கண்கள்...
இருவயறு நிறைய
இருட்டின் நிழலில்
கட்டியணைக்க காசுதரும்
காமன்கள் எத்தனை பேர்...
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (27-Feb-13, 9:51 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 118

மேலே