ஏக்கம்...!

மாமிசமும் இரத்தமுமில்லா
ஒரு இடம் தேடிய எனது
ஓட்டத்தில் எப்போதும்
தூக்கிச் செல்லும்
தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!

என்னுள் இருந்து
ஏதேதோ சிந்திக்கும்
குழைவான திடப்பொருள்தான்
நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்துவிட்டு
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!

எல்லாம் கடந்து
எங்கேயோ நான் இருந்து
காற்றைப் போல பரவி
கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்
நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்
ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்...
வெளிப்படுகிறது எப்போதும்...
ஏக்கங்களின் வெளிப்பாடாய்....!

எழுதியவர் : Dheva.S (28-Feb-13, 4:37 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 158

மேலே