அன்பின் எல்லை காமம்
அன்பின் தொடக்கம் ஆசை
ஆசையின் முடிவு இன்பம்
இன்பத்தின் தொடக்கம் ஈர்ப்பு
ஈர்ப்பின் தொடக்கம் உள்ளம்
உள்ளத்தின் முடிவு ஊடல்
ஊடலின் தொடக்கம் எண்ணம்
எண்ணத்தின் தொடக்கம் ஏக்கம்
ஏக்கத்தின் முடிவு ஐயம்
ஐயத்தின் தொடக்கம் ஒருமை
ஒருமையின் முடிவு ஒருங்கிணைந்த காமம்