தோல்வி
தோல்வியை தழுவி தழுவி எனது
தோல்கள் தேய்ந்துவிட்டன
தோல்வியை நழுவு நழுவு என்ற
தோழனும் தேய்ந்துவிட்டான்
தோல்வியை தேடிச்செல்ல தோன்றவில்லை
தோகை இல்லாத பெண்மயிலுக்குத் தான் தெரியும்
தோகையின் பெருமையும்
தோல்வியின் சிறுமையும்
தோற்கடிக்க பட்டவனுக்குதான் தெரியும்
தோல்வியின் கொடுமை

