கண்டும் காணாமல்...
ரத்த சொந்தங்கள்
சொந்த பந்தங்கள்
சொந்தம் தாண்டிய
நட்பின் உரிமையால்
உதவி பெற்ற உள்ளங்கள்....
கண்டும் காணாமல்.....
போகும் பொழுது
கலங்கவில்லை மனம்
கலங்கிப் போனதோ மனிதம்
பணத்தின் கணம் தான்
பந்தம் தருகிறது
காசின் மேல் நேசம் தான்
சுவாசமாகிப் போகிறது
உரிமை என்ற பெயரில் மற்றவன்
உழைப்பு உறிஞ்சப்படுகிறது
என்று
எண்ணும் போதிலே
புழுவாய் துடிக்குது இதயம்
பாவிகளின் பணப்பித்து
புத்திக்கு எட்டினாலும்
பொறுக்க முடியவில்லை எதையும்...
மனிதர்களின்
மறைந்திருக்கும்
மற்றொரு மனம் அதனை
இனம் காணும்
குணம் உண்டு
பணம் என்னும் இனத்திற்கு....
காதறுந்த ஊசியும் வாராதே ....
பட்டினத்தார் பாட்டு இக்கணம்
என் நினைவிற்கு....

