தமிழக வரலாற்றை உண்மையாக எழுதினால்...சோ.அய்யர்...! மெல்ல பிழைக்கும் தமிழர்கள் வரலாறு...!

தமிழக வரலாற்றை உண்மையாக எழுதினால்...சோ.அய்யர்...! மெல்ல பிழைக்கும் தமிழர்கள் வரலாறு...!

தமிழக தேர்தல் ஆணையர் திரு.சோ அய்யர் அவர்கள் தான் இவ்வாறு கூறியுள்ளார். பசும்பொன் கலை இலக்கிய வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கோலாலம்பூர் நேதாஜி மைய்யத்தின் செயலாளர் சுப.நாராயணசாமிக்கு நேதாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றிய காரணத்துக்காக வழங்கப்பட்டது இந்த விருது.

மேலும் கூறுகையில், தென்பாண்டியின் வரலாற்றை எழுதாமல் விட்டுவிட்டார்கள்..அல்லது மாற்றி எழுதி விட்டார்கள். சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பியதும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் இவ்வாறு பேசினார். எனக்கும் இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் வெளிநாடுகளில் பெருமை என்றால் அதற்கு சேதுபதி மன்னர்தான் காரணம் என்று கூறியுள்ளார். அதுபோலவே நான்காம் தமிழ் சங்கத்தை உருவாக்கியவர் பாண்டித்துரை தேவர்...இவர் குறித்தும் சரியாக எழுதப்படவில்லை என்றார்.

வரலாற்று ஆசரியர்கள் வரலாற்றை உண்மையாக எழுத வேண்டும். தமிழக வரலாற்றை உண்மையாக எழுதினால் இந்தியாவுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைக்கும். ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களுடன் போரிட்ட பெண் வேலு நாச்சியார் அவர்கள். ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை இழந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை மீட்டவர் அவர். இந்தப் பெருமை வேறு யாருக்கும் கிடையாது என்றார் சோ அய்யர்.

அப்பாடா... இப்பவாவது இவ்வாறு கூறுகிறார்களே...இந்த உண்மை போக்கு தொடர்ந்து தமிழ் தேசிய கட்சிகள் ஓங்கி குரல் கொடுப்பதாலும் இணையங்களில் தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களை கொண்டு... தமிழ் மொழி குறித்தும் அதன் வரலாறு குறித்தும்...குரல் எழுப்பி வருவதால் தான் என்றால் மிகையில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சி புரிந்த மருது பாண்டியர்கள் வரலாற்றில் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளனர்....மருதுவும் வேலுநாச்சியாரும் போர் புரிந்த வரலாறு மெய் சிலிர்க்கவைக்கும் வரலாறு..மருதுபாண்டியர்களை பிடிப்பதற்கு முன் சுமார் ஆயிரம் போர் வீரர்களை ( திருப்பத்தூரில்..மட்டும் ) தூக்கில் போட்டுள்ளார்கள் ஆங்கிலேயே அதிகாரிகள்...மருது பாண்டியர்கள் கழுத்தை அறுத்து உடலை திருப்பத்தூரிலும்.... தலையை காளையார் கோவிலிலும் போட்டுள்ளார்கள். மருது வீரர்களை கட்டி இழுத்துக் கொண்டு சென்றார்கள் சங்கராபதி கோட்டையில் இருந்து...இன்று அந்த கோட்டை பீ பேளும் இடமாகவே சிதைந்து எச்சங்கள் இன்றும் உள்ளன...வரலாறு மேல் அக்கறையும் தமிழர்களின் வீரத்தை போற்றுபவர்களும் நெஞ்சுருகிப் போவார்கள் அந்த கோட்டையை பார்த்தல்...!

ரிப்பன் கட்டிடத்தில் இருந்த வைசிராய் மருது சகோதரர்களை வெற்றி கொண்டதை ஆங்கிலேயே வரலாற்றில் ஒரு மைல் கல் என்று எழுதி வைத்துள்ளார்கள்...தமிழர்களின் வரலாற்று தொன்மங்கள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அந்த இடங்களை பாதுகாக்காமல் மல ஜல கழிக்கும் இடமாக மாற்றியுள்ளார்கள்...பார்ப்பனியத்தை முன் நிறுத்தி ஆட்சி புரிபவர்கள்....ஒரு சமூகமே அதாவது இன்றைய இளைய தலைமுறை இதுபோன்ற ஆராய்சிகளில் ஈடுபட்டு தமிழர்களின் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டும்...

' ஜம்பைத்தீவு ' என்று ஒரு பிரகடனம்...( அதுஎன்ன ஜம்பைத் தீவு பிரகடனம்...? ) திருச்சி கோட்டையில் தட்டி வைத்து
( அதாவது இன்றைக்கு போஸ்டர் என்று சொல்லுவோம்...) வீரர்களை போர் புரிவதற்கு அழைத்தார்கள்.அன்றைய தமிழன் போஸ்டர் போட்டு போருக்கு அழைப்பு விட்டான்..இன்றைய தமிழன் தளபதிக்கு போஸ்டர் போட்டு பால் ஊற்றுகிறான்...

மருது பாண்டியர்களை தோண்டினால் தமிழன் வரலாறு முழுதும் வந்துவிடும் என்று மூடி மறைத்துள்ளார்கள்...சங்பரிவார் கூட்டம்...இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் தங்கள் ஓய்வுக்குப் பிறகாவது வரலாற்றை கொண்டுவரும் முயற்சியில் இறங்க வேண்டும்.. என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Mar-13, 4:59 pm)
பார்வை : 303

சிறந்த கட்டுரைகள்

மேலே