என் நிறைவு பெறாத ஆசைகள்...!
கவிதை எழுத ஆசைப்பட்டேன்...!
கற்பனைகளே தோன்றாமல்..!!
ஓவியம் தீட்ட ஆசைப்பட்டேன்...!
கண்கள் இல்லாமல்...!!
பாடல் இசைத்திட ஆசைப்பட்டேன்...!
செவிகள் கேட்காமல்...!!
படித்து மகிழ ஆசைப்பட்டேன்...!
மொழிகள் தெரியாமல்...!!
உச்சரிக்க ஆசைப்பட்டேன்...!
உதடுகள் பிரியாமல்...!!
இன்பமாய் வாழ ஆசைப்பட்டேன்...!
நன்மைகள் செய்யாமல்...!!
குழந்தையாய் மாறிட ஆசைப்பட்டேன்...!
குணங்கள் மாறாமல்...!!
தாயாய் மாறிட ஆசைப்பட்டேன்...!
குழந்தை ஈணாமல்...!!
பறவையாய் மாறிட ஆசைப்பட்டேன்...!
சிறகுகள் முளைக்காமல்...!!
தேர்ச்சி பெற ஆசைப்பட்டேன் ...!
தேர்வுகளே இல்லாமல்...!!
மரமாய் மாறிட ஆசைப்பட்டேன்...!
விதையே விதைக்காமல்...!!
கடைசியில்.........
கடவுலாக மாறிடவும் ஆசைப்பட்டேன்........!!
அச்சச்சோ ..........!!!
கடவுளுக்கு தெரிந்து விட்டது போலும் .................!!
என் சுவாசக்காற்றை நிறுத்திவிட்டான்.....!!!