கடைசி வார்த்தை தலைப்பு:-
கடைசி வார்த்தை தலைப்பு:-
தொடாமலே தொடர்ந்து வரும்
தொட்டால் ஒட்டிக் கொள்ளும்
வெட்ட வெட்ட துளிர்க்கும்
வேரோடு வெட்டினாளும் துளிர்ப்பதெது?
கெட்ட மதிபடைத்த மனிதன்
பட்டி தொட்டியெங்கும் தூவி
இந்திய மண்ணில் விதைத்து
மனிதகுலத்தை அழிக்கும் விதையது.
பாதியில் உள் நுழைந்து
ஓதி ஓதி உயர்ந்து
ஆதியையும் மீதியையும் அழித்து
பிறப்பில் ஒட்டிய உடலது.
பள்ளிப்படிப்பில் முளை விட
நுழையும் வேலைக்கு தடையாக
திருமண வேள்வியில் கொழுந்து விட
குழந்தையில் ஒட்டி வெளிவருகிறதே...
அரசாங்கம் மனம் வைப்பின்
இன்றே இஃதை அழிக்கலாம்
பள்ளியின் நுனியில் பதிவிக்காவிடின்
நாளைய சமுதாயம் உயருமே…
மருந்து திண்றாலும் மறையாது
வாடிவதங்கினாலும் வளர வைக்கும்
அரசியல் ஓநாய்களின் கைபிள்ளையாக
என்றும் இந்தியாவில் அழியாதது சாதி.
நன்றி
வாழ்க வளமுடன்
ரா.சிவகுமார்