நீ நானாக்கப்படிருப்பவள்

உனது
முகப்பருக்களை
முகத்திலேயே
விட்டு விடு

பகலிலும்
நட்சத்திரங்கள்
பார்க்கட்டும்
பிரபஞ்சம்

----------------------------

சிரித்தபடி
என்னை பார்ப்பாயே
அப்போது தான்
நான்
மொட்டுக்கள் மலர்வதை
பார்த்திருக்கிறேன்

----------------------------

கவிதைள் எழுவதை நிறுத்தியே
ஆகவேண்டும்

காரணம் கேள்?

நான் என்னை சந்தித்தேன்
பல நாட்கள் ஆகிவிட்டன..

----------------------------

இப்போதெல்லாம் அதிகமாக கவிதைகள் படிப்பதே இல்லை
இப்போதைய எனது வசிவிட முகவரி
யாருமே வந்துவிடக்கூடாத ”தனிமை”
மன்னியுங்கள் நீங்களும் வந்துபார்க்க முடியாது
ஒருமுறை சென்று வாருங்கள்...

----------------------------

பாவாடை
சட்டை
உனக்கு அழகு தான்
ஆனாலும் என்னையும் போட்டு கொள்ளேன்..

----------------------------

எனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன் மெளனங்களை கலைக்காதே
காதல் இன்னும் காத்திருக்கும்

----------------------------

உன்னை
நிலவு
தாமரை
என்று தொடரும்
வர்ணனை வர்ணங்கள் பூச விரும்பவில்லை
நீ நானாக்கப்படிருப்பவள்.

----------------------------

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (5-Mar-13, 11:01 am)
பார்வை : 206

சிறந்த கவிதைகள்

மேலே