அடைமழை..!
அவளின்
கனிவுமிகு பார்வையால்
சிதறுண்ட இதயம் போல்
வான் பிழந்து
பொழிந்தது அடைமழை..!
கோபம்கொண்ட மேகங்கள்
சுட்டெரிக்கும் சூரியனை
வென்றதாம்..
ஆச்சரியம்..
தார்சாலையில் ஜல்லியினும்
மிகுதியாய் திடீர் பள்ளங்கள் !
நடுத்தர மக்கள்
ஆர்ப்பாட்டம்..
வாழ்க்கை பாதித்தமையால்!
சாலையோர மக்கள்
ஆரவாரம்..
இன்றைய பசி
இனிதே முடிந்ததில் !
- மகா