இல்லை...இருக்கிறது...!
உலகத்தில் மெய் இல்லை
பொய் இருக்கின்றது
வேண்டுவோர் கையில் பணம் இல்லை
வேண்டாதோர் கையில் அது இருக்கின்றது
யாரிடமும் அஞ்சாமை இல்லை
அச்சம் இருக்கிறது
சமூகத்தில் ஒற்றுமை இல்லை
வேற்றுமை இருக்கிறது
மின்சாரம் இல்லை
மின்சாரக் கம்புகள் இருக்கின்றது
பயிர்கள் இல்லை
வயல்கள் இருக்கின்றது
தண்ணீர் இல்லை
அணைகள் இருக்கிறது
மரம் வளர்க்க இடம் இல்லை
கட்டிடம் கட்ட இடம் இருக்கிறது
உளுவோர்க்கு உணவு இல்லை
பாடுபடாதோற்கு அது கிடைக்கின்றது
தற்போது அரசியலில் நல்ல கட்சிகள் இல்லை
அதற்கு பல சாட்சிகள் இருக்கின்றன
குடிப்பதற்கு தண்ணீர் இல்லை
மது மட்டும் கிடைக்கின்றது
மனிதர்களிடையே அன்பு,பண்பு இல்லை
கடுப்பு,வெறுப்பு இருக்கின்றது
யார் மனதிலும் ஈரம் இல்லை
ஆனால் இனவெறி இருக்கின்றது
சுவாசிக்க பிராணவாயு இல்லை
எங்கேயும் கரிவாயு இருக்கின்றது
குருவிகளை பார்க்க முடிவதில்லை
எங்கேயும் கருவிகளைப் பார்க்க முடிகின்றது
எவனும் தன் தாய் மொழியை முழுமையாக கற்று கொள்வதில்லை
அதனுல் பிற மொழிகளை கற்க இருக்கின்றான்
இன்னும் எழுத நேரம் இல்லை
ஆனால் எழுத பல இருக்கின்றது

