பாழடைந்த பாரதநாடு
நதிகள் நிறைந்த நாடு இது ..
நதிநீர்ப் பிரச்சனைக்குப் பஞ்சமில்லை!!
தஞ்சம் கொடுக்கும் நாடு இது...
ஊழல் லஞ்சத்திற்கு பஞ்சமில்லை!!
பன்னீர் மனம் வீசும் நாடு இது
கண்ணீர் வாடை இங்கு கொஞ்சமில்லை!!
கனவுகள் நிறைந்த நாடு இது...
கற்பழிப்புகள் இங்கு ஓய்வதில்லை!!
கற்பழிப்புகள் நிறைந்த நாடு இது...
கன்னித் தாய்களுக்குப் பஞ்சமில்லை!!
கன்னித்தாய்கள் நிறைந்த நாடு இது...
கருணைக் கொலைகளுக்குப் பஞ்சமில்லை!!
பெண் சிசுவைக் கொல்கிறார்கள்!
கருணைக் கொலை என்கிறார்கள்!!
ஓட்டளிக்க செல்வதுண்டு !
அது யாருகென்று தெரிவதில்லை !!
நித்தம் சுத்தும் நீல உருண்டையே...
உனக்கு நித்திரை என்பது கிடையாதோ?
சுத்தக் கொஞ்சம் மறந்தால் என்ன?
மானுடனை மரணமடையச் செய்தால் என்ன...
இது எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதில்லை
பொருந்தியநாடு பொறுப்பேற்றுக்கொள்வதில்லை
கண்டிப்பாக இது எந்நாடு இல்லை...
ஏனென்றால் நான் இந்தியாவிலேயே இல்லை!!
இப்படிக்கு...
ஆனந்து தமிழன்

