பாலையில் முல்லையாய்

விழியின் விளிம்பில்
வழியும் வருத்தம் !
இதயத்தின் சுமை
இமைகளின் ஈரம் !

விரிந்த பார்வையோ
விளக்கிடும் சோர்வை !
விவரம் அறிந்திட
விரைந்திடும் மனமும் !

பாவையவள் கண்களும்
பாலையில் முல்லையாய்
பாரினில் நிலையாய்
மலர்ந்திட விழைகிறேன் !

( உலக மகளிர் தின வாழ்த்துக்கள் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Mar-13, 1:18 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 90

மேலே