என் அழுகையில்...

பல இரவுகள்
வலியின் பிடியில்
சிக்கி அழுதது
ஓர் இதயம்.
துடிதுடித்திருந்தேன்
உறக்கமின்றி.
காலத்தின் உந்தலின்
வெளியேற்றப்பட்டேன் நான்
அன்றும் துடித்தாள் அவள்
பொறுக்க முடியாமல்
வாய் விட்டு அழுதேன் நானும்
என் அழுகையில்
அவளின் சிரிபொலி
பூரிப்பாய் வளர்கிறேன்
அவளின் பிள்ளையாய்
'அம்மா' என்று அழைத்தபடி....

எழுதியவர் : தோழி பிரஷா (7-Mar-13, 5:03 am)
பார்வை : 181

மேலே