உயில் எழுது

பூக்களே எழுது
இனிமையான நம் நட்பின்
இயல்பெழுது

வார்த்தையில் அதை
வடித் தெழுது
கவியில் கூட
நிஜம் எழுது

கண்கள் கனவெழுத
நெஞ்சமே நீ
நினைவெழுது

பூங்குயில் பாட்டெழுது
பைங்கிளிப் பேச்செழு து
கூடவே
இசையாய்
பல திசை எழுது

பாகுபாடு உடைத்து எழுது
பாதைகள் தாண்டிவர
பார்வையே நீ உரு எழுது

காதலில் எம்மை
பிரித்தெழுது
அன்பை மட்டும்
சேர்தெழுது

சுவாசமே நீ உயிரெடுத்து
அதை
நட்பில் நனைத்தெடுத்து
உறவின் உருவம் நீ எழுது

வென்னில உருவில்
முகமூடியனியா
நம் நட்பெழுது
அதை உயிலாக
நீ எழுது

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (7-Mar-13, 11:22 am)
சேர்த்தது : hafeela
Tanglish : uyil ezhuthu
பார்வை : 118

மேலே