உலகம் அழியும் நாளன்று .

உலகம்
தன் கை கொண்டு
கண்ணீர் துடைக்க மறுத்து
கண்ணீர் குடிக்கும்
நாளது .

இதுவரையில்
உயிர்கட்கு அடைக்கலமளித்த
உலகம்
முதன் முதலாய்
உயிர் குடிக்கும் நாளது .

தன் அழிவை எண்ணி
மலைகளெல்லாம்
தூசாய் தூர்ந்தும் ..

அதுவரையில்
அக்கினிக்குழம்பை கக்கி
இரத்தக்குழம்பை
உண்ட எரிமலைகள்
காவு கொண்ட பயத்தில்
கதறி அழும் நாளது .

சமுத்திரம் என்று
அழைக்கப்பட்ட
பெரும் தண்ணீர் திடல் கூட
தாகம் கொண்டு
வானம் பார்க்கும்
நாளது ..

அழியும் நாள் வரை
அநியாயத்தில்
மூழ்கிய மனிதன்
ஆயுள் நீள
வேண்டுவதும் ..

மடி சுரந்த பாலை
கன்றுக்கு ஊட்ட மறுத்த
பிராணிகளும் ..

நிறைமாத கர்ப்பிணி
தன வயிற்றுக் குழந்தை
வழுக்கி விழுந்ததை
அறியாமல்
விழுந்தடித்து ஓடும் தாயும் ..

பூமியின் பல பாகங்கள்
தன்னை
கறுப்புப் போர்வைக்குள்
போர்த்திக் கொள்ளும்
காட்சியும் ..

நொடியில்
மரங்களின் தலைகளைக் கொய்ய
படையெடுத்து வரும்
காட்டுத்தீயும்

விரண்டொடும் மனிதனை
எட்டிப்பிடிக்கும் அவசரத்தில்
தன கையில்
மையிருட்டைத் தடவி
விரைந்துவரும்
புகைமண்டலமும்

உறவுகளை மறந்து
மரண பயத்தில்
மனிதன்
பயந்தோடும் நாளது ..

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (7-Mar-13, 11:30 am)
சேர்த்தது : hafeela
பார்வை : 107

மேலே