தாயின் கருவறை

வாடகை இல்லாத சொகுசு பங்களா
சாப்பாடு கிடைக்காத தனிமனித வீடு
குழாய்வழி ஊட்டலும் சிறுகுறு ஆட்டலும்
இனிதே நிறைந்த உன்னத கூடு
வலிகளை மறந்து விழிகளை தரும்ஆலயம்
இதழ்களைப் பிரித்து இன்சொல்கூறும் பள்ளியறை
ஈரைந்து மாதங்கள் ஆற்றியபணிகள் ஆயிரம்
அதுவே தாயின் தன்னலமற்ற மந்திரம்

எழுதியவர் : Leenus (7-Mar-13, 2:30 pm)
பார்வை : 219

மேலே