நல்ல தம்பதி

நல்ல தம்பதி நீவீரே!,
இல்லஞ் சிறக்க வாழ்வீரே.
எல்லாம் பெற்று நலமாக,
இனிக்க இனிக்க வாழ்வீரே.

குடும்பம் என்று ஆனாலே
குறுஞ் சிக்கல் வருந் தானே.
ஒரு வரொருவர் புரிந் தாலே
ஒன்று மில்லை தொல் லையே.

அதி காரம் ஓரி டமே
அதிகம் சுமக்க முய லாமல்
சமமப் பொறுப்பு உணர் வீரே
சகச மாய் ஓடுங் காலமே.

கலந்து பேசி முடிவு களை
காலங் கணித்து எடுக் கனும்.
நிலவும் உண்மை மட் டுமே
நெஞ்சில் நம்பிக் கொள் ளனும்.

உரிமை என மதிக் கையில்
ஒரு வருக்கே உண்டு தான்.
இரு வரை ஒருமை யாக்கி
இணை ந்தது தானே தம்பதி.

நன் மகவு பெற்றி டுவீர்.
நாடு போற்ற வளர்த் திடுவீர்.
தமி ழோடு பிற மொழியும்-
தரங் கற்கச் செய் திடுவீர்.

எழுதியவர் : கவிஞர். கொ.பெ.பிச்சையா (7-Mar-13, 2:34 pm)
பார்வை : 231

மேலே