இன்றைய விவசாயியின் நிலைமை

நெற்றி வியர்வை சிந்திடும் உத்தமன்
ஊருக்கே உணவளித்து மகிழும் நல்லவன்
உண்ணவும் உணவில்லை உடுத்தவும் உடையில்லை
இதுதான் இன்றைய உழவனின் நிலைமை


மண்ணுலக மாந்தர்கள் உதவியேதும் செய்யவில்லை
விண்ணுலக வேந்தர்கள் கருணைமழை பொழியவில்லை
நம்பிக்கை போனது சிந்தையும் கலைந்தது
வழியின்றி தவிக்கிறான் இதுதான் அவன்நிலைமை

ஊரார் பசிதீர்த்த புண்ணிய மானிடன்
தன்பிள்ளையின் பசிபோக்க வழிதேடி அலைகிறான்
மனிதன்தான் பொய்த்துவிட்டான் மழையும் பொய்த்ததுஏனோ
பார்த்தாயா கடவுளே இதுதான் அவன்நிலைமை

விளைநிலம் முழுவதும் விலைநிலமாய் மாறியது
வாய்கால் வரப்பெல்லாம் கண்ணீராய் ஓடியது
ஒருவேளை உணவுக்காக அவன்மனமும் வாடியது
பார்த்தாயா மனிதமே இதுதான் அவன்நிலைமை

குடும்பத்தோடு சென்றுவிட முடிவுகள் எடுத்துவிட்டான்
பஞ்சம்தேடி அல்ல விண்ணுலகில் தஞ்சம்தேடி
உன்னைத்தேடி அங்கேவரும் வாழ்விழந்த உழவர்களை
நிம்மதியாய் வைப்பாயா ஒருவேளை உணவுதந்து

எழுதியவர் : Leenus (7-Mar-13, 2:14 pm)
பார்வை : 130

மேலே