துடுபில்லா சிறுஓடம் ...
துடுபில்லா ஓடம் நான்
சுழல்கிறேன் சிறு துரும்பாய்
கரையேது நடுவேது
தேடுகிறேன்
தெரியவில்லை
தனிமையில் நான்
முட்டி மோதி
எக்காளமிடும்
பேரலை சிற்றலை
கூனி குறுகி வழி விடுகிறேன்
ஆனால் அவையோ
எனை முட்டி மோதி
ஆர்ப்பரித்து
எள்ளி நகையாடி
ஆர்ப்பரித்து
எனை கொல்கின்றன
நானும் காத்திருகின்றேன்
கிழக்கின் விடி வெள்ளிக்காய் ....