...............துறந்தாலும்.............
இருந்துவிட்டுப்போகட்டும் எண்ண ஓட்டங்கள்,
இருண்ட அறைகளுக்குள் !
இழந்துவிட்டுத்தவிக்கட்டும் புத்தி,
பெண்ணை தொலைத்த பரிதாபத்தில் !
எதிரேவந்து என் பாவங்களை நியாயப்படுத்தி,
நடிகன் என்று பெயர்வாங்க இனி ஒருபோதும்,
சம்மதிக்காது எனது உயிர் !
கந்தகம் உன் வார்த்தைகள் !
அதில் நான் வெந்தவரை போதும் !
அன்பே !!
உனக்கே என் வாழ்க்கை என்பதை,
என் வாழ்கையே நன்கு அறியும் !
நீ முகம் துறந்து எனை முடித்துவிட்டுப்போனாலும் !!