முரண்பாடு
கேளுங்கள் கொடுக்கப்படும் என்றார்கள் -நான்
கேட்காமலேயே அவள் இதயத்தை தந்தேன் என்றாள்;
இன்று நான் கேட்டும் கேளாமல் போகின்றாள்!!
தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள் - தானாகவே சன்னல் கதவை திறந்து வைத்தாள்;
இன்று அவள் கண்ணுக்கு நான் தென்பட்டதும் தாழிட்டு கொள்கிறாள்!!
தேடுங்கள் கிடைக்கும் என்றார்கள் -நான் தேடுகிறேன் தொலைந்த என் உணர்வுகளை !!!
உறங்கும் போது கனவினில் வந்து தரிசனம் தந்தாள்
கனவுக்காக ஏங்கும் போது உறக்கத்தை கெடுத்தாள் ;
எதிர்பாராத போது எதிர்பார்த்ததைத் தந்தாள்.
எதிர்பார்த்த போது ஏமாற்றத்தைத் தந்தாள்.
சோகத்தில் அமர்ந்த பொது சொந்தமே நீ என்று அணைத்தாய் ! உன்னை சொந்தமாக்க வந்தபோது
சோகத்தோடு என்னை பினைத்தாய் !