பெண்மையை போற்றுவோம்!!!பெண்மையை போற்றுவோம்!!!

பெண்மையை போற்றுவோம்!
பெண்மையை போற்றுவோம்!
பெண்ணின் பெருமைகளை போற்றுவோம்!
பெருமையுள்ளம் கொண்ட
பெண்களை போற்றுவோம்!
விளக்கென்றால் திரியாக இருப்பாள்.
விரலென்றால் நகமாக இருப்பாள்.
வானமென்றால் இருளில்
நிலவாக ஒளி வீசுவாள்.
வாழ்க்கையென்றால் இதயத்தில்
துணைவியாக ஒளி வீசுவாள்.
பெண்மையை போற்றுவோம்!
பெண்மையை போற்றுவோம்!
சர்வ சாதாரணமாக
பிறந்தவள் அல்ல பெண்மை.
சர்வாதிகாரத்துடன் சாதிக்க
பிறந்தவளே பெண்மை.
பெண்மையை போற்றுவோம்!
பெண்மையை போற்றுவோம்!
ஆண்மக்களின் உள்ளங்களை
ஆட்டிப்படைப்பவலும் பெண் தான்.
ஆளுமை திறத்துடன் உலகத்தை
ஆள்பவலும் பெண் தான்.
மழை தரும் கருநிற மேகமும் பெண் தான்.
மனதில் சுகம் தரும் இதய துடிப்பும் பெண் தான்.
கடலில் அலையும் பெண் தான்.
கண்ணில் விழியும் பெண் தான்.
நம்மை சுமக்கும் பூமித்தாயும் பெண் தான்.
நட்போடு நடை பழகியவலும் பெண் தான்.
அனாதை குழந்தைகளை அன்போடு ஆதரித்த
அன்னை தெரேசாவும் பெண் தான்.
அன்புள்ளம் கொண்ட தாய்மை குழந்தைக்காக
அகத்தில் இரத்தத்தை பாலாக மாற்றி ஊட்டும்
அன்னையும் பெண் தான்.
உன்னை மடியினில் சுமந்தவளும் பெண் தான்.
என்னை கருவறையில் சுமந்தவளும் பெண் தான்.
பெண்மையை போற்றுவோம்!
பெண்மையை போற்றுவோம்!
பெண்ணின் பெருமை!மண்ணின் பெருமை!
மனதளவில் பெண்ணிற்கு மதிப்பு கொடுத்து,
மண்ணில் பெண்ணின பெருமைகளை உலகளவில் அரங்கேற,
உயிர் கொடுப்போம்!உயிர் கொடுப்போம்!
வாழ்க பெண்மை!
உயர்க பெண்ணின் பெருமை பாரதத்தில்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Mar-13, 12:22 am)
பார்வை : 6864

மேலே