ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

அமைதியாய் நீ உறங்கும் வேளை
ஆசைவரும் உன்மேலே
அலைஅலையாய் தவழும் வேளை
பாடல் வரும் தன்னாலே

உனக்குள் நீ வெடிவெடித்து
தீபாவளி கொண்டாட
கரையோர மானிடரை
விருந்துக்கழைத்தல் என்னமுறை?

உனக்குள்ளே கணக்கு உண்டா?
உன்னூரில் எல்லைக்கோடுண்டா?
எப்படி நீ பிரித்துப் போட்டாய்?
அதனால் பலர்வாழ்வை வகுத்துப்போட்டாய்..

உன்னை நம்பி வந்தோரை
உன்னால் உயிர் வாழ்வோரை
உயிர்ப்பலி கொடுத்தென்ன கண்டாய்?
பலிகடா ஆக்குவதேன் வேண்டுதலோ?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Mar-13, 6:45 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 125

மேலே