காதலின் தவிப்பு................................!!
தினம் நூறு முறையாவது நீ
எனை கடந்து செல்ல வேண்டும்,
உன் சந்திர வதனத்தை தரிசித்தே,
என் கண்கள் மோட்சமடைய வேண்டும்,
என் இதயம் உன் வருகைக்கு ஏங்க,
கண்களோ உனை காணாமல் தவிக்க,
என்னிதயம் வடிக்கும் கண்ணீர்
உன் புறக்கண்களுக்குத்தான் தெரியாது,
பெண்ணே............................
உன் அகக்கண்களுக்குமா தெரியாது.
உன் உருவத்தை என் கண்கள் தாங்க,
உன் வருகைக்கு என்னிதயம் ஏங்க,
நீ விரைவில் வந்துவிடமாட்டாயா?
என்று,
நீ வரும் பாதையில் என் விழிகள்
காத்துக் கிடக்கிறது...
எப்போது உன்உருவம் தட்டுப்படும்
என்று ஏங்கித் தவிக்கிறது.