சில்லுனு...ஒரு காதல்...!

அது ஒரு மழை நேரத்து
மாலை நேரம் - என்
ஒற்றையடிப்பாதை
நடையோடு துணைக்கு வந்த
நிலாவையும்...தாண்டி
பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்...

வழி நெடுகிலும் நடை பயின்று
ஒயிலாய் வந்த
ஒரு ஊதக் காற்று
காதோரம் வந்து
உன் பெயரை கிசு கிசுத்து விட்டு
ஓடி மறைந்தது.....!

தூரத்திலிருந்து
ஒரு நட்சத்திரம்
உன்னைப் போலவே
கண்டும் காணாமல் கண் சிமிட்டி
எந்த நேரமும் போய்விடுவேன்
என்று பயமுறுத்தியது!

என் சிந்தனைகள்
உன்னிடமே சிக்கி இருப்பதால்
பக்கத்தில் நகர்ந்து செல்லும்
ஆட்டு மந்தை போல
வெறுமனே நானும் நகர்கிறேன்
மந்தையில் ஒருவனாய்....

சில் வண்டுகள் எல்லாம் கூடி
தூறிக் கொண்டிருக்கும் மழையையும்
காதல் சாரல் வீசிக் கொண்டிருக்கும்
என் மனதையும் கிண்டல் செய்து
தொடங்கி விட்டன சப்தத்தை!
எத்தனை முறை
மாற்றிப் பார்த்தாலும்
கட்டவிழ்ந்த கன்று போல
உன்னை நோக்கிப் பாய்கிறது
என் மனது!

யாரின் சப்தமோ
நிசப்தத்தை கிழித்து
யாரையோ தேடுகிறது
காற்றில்!
இருட்டான வானமும்
என் மனமும்
போட்டிப் போட்டு
கனத்து கிடந்தன
நான் வெறுமனே நடக்கிறேன்
காதல் பெய்விக்கிறது
மழையை எனக்குள்ளேயும்!

எழுதியவர் : Dheva.S (9-Mar-13, 11:13 am)
பார்வை : 244

மேலே