துணையாக வந்தாய்

சின்ன சின்ன கவிதை நீயே
செல்ல செல்ல தேவதை நீயே
சின்ன சின்ன கூட்டுக்குள்ளே
சிறகைவிரிக்க வைத்தாயே
சிகரமாக எனது வாழ்க்கையை
மாற்றி வைத்தாயே !
கண்ணிமைக்கும் நேரத்தில்
களத்தினில் புகுந்தவளே
எட்டா சூரியனாய்
தெவிட்டா கனியாய்
தன்னிலை மாறாமல்
என்னிலை வந்தவளே !
உனக்கென்று கோடு போட்டு
உயிரை அதில் ஓட விட்டு
உச்சிமோர்ந்து உருகியிருந்தேன்
உள்ளங்கை பற்றி
உணர்த்தி சென்றாய்
உன்னுயிரில் சரிபாதிஎன்று !
நீண்ட நிலா வெளியில்
நடைபயணம் நகைக்கிறது
அழகு நிலா அருகிலிருக்க
தொலைவினில் சுகமோ
துரத்தி விடு என்று !
துணையாக வந்தாய்
தூணாகி போனாய்
துக்கத்தை துரும்பாக்கி
ஏக்கத்தை எதிர்கொண்டு
துயரத்தை தூசியாக்கி
அலட்சியத்தை அகற்றி
லட்சியத்தை ஏணிகொண்டு
என்னருகே சேர்த்தாய் !