விரும்பினேன்...தேடுகிறேன்...

தடையில்லா
பாதையில்
நடக்க
விரும்பினேன்...

முள்ளில்லா
ரோஜாவை
முகர
விரும்பினேன்...

மாசில்லா
காற்றை
சுவாசிக்க
விரும்பினேன்...

சண்டையிலா
சமூகத்தில்
வாழ
விரும்பினேன்...

சற்றும்
சறுக்கலில்லா
உச்சி தொட
விரும்பினேன்...

தோல்வியிலா
வெற்றியில்
தோள் தட்ட
விரும்பினேன்...

இல்லாதவை
தேடுகிறேன்,
கிடைக்கும்
என்றெண்ணத்தில்...

எழுதியவர் : சலீம் கான் (சகா) (10-Mar-13, 6:33 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 785

மேலே