குழந்தைப் பாடல்.8 (பாரதியார் )
.
பாரதியார்.
பாரதிதான் யாரம்மா?
பாப்பா உனக்குத் தெரியுமா?
பாப்பா பாட்டுப் பாடிய
பாரதியார் தானம்மா..
ஓடி ஆடச் சொன்னவர்.
ஓயக் கூடாதென்றவர்.
காலை படிக்கச் சொன்னவர்.
கடியக் கூடாதென்றவர்
தலைப்பாக் கட்டு கவிஞராம்.
தடித்த மீசைக்காரராம்
தமிழோடு பிறமொழிகள்
திறனும் பெறச் சொன்னவராம்.
கருப்புப் பொட்டு இட்டவர்,
கருப்புக் கோட்டும் அணிந்தவர்,
காளியைத்தான் வேண்டுவார்,
கவிகள் பாடித் தூண்டுவார்..
கூடிப் பழகப் பாடினார்.
பாடி மகிழக் கூறினார்.
தேடித் தேடி தமிழனை
தேச உணர்வை ஊட்டினார்

