கூட்டத்தில் ஒருவனாய்

விலகியும் ..விலகாமலும்
வாழுகின்றேன்!
தெரிந்தும் ..தெரியாமலும்..
எழுதுகின்றேன் !
பசித்தும்,,பசிக்காமலும்
புசிக்கின்றேன் !
நடந்தும்.. நடக்காமலும்..
நம்புகின்றேன்..!
நம்பியும் ..நம்பாமலும்..
கூடுகின்றேன் !
உணர்ந்தும்...உணராமலும்..
ஓடுகின்றேன் !
ஓடும்போதே
ஓய்வை தேடுகின்றேன் !
ஓய்வின் போதும்
உலகை நாடுகின்றேன் !
முழுமை இல்லா நிலையில்..
முழுமை பற்றி பேசுகின்றேன் !
முழுதும் தெரிந்தவன்
என்றே,,
முழக்கம் செய்து நிற்கின்றேன்!
நான்தான் இப்படி என்று..
நாணம் கொண்டபோது...
போடா தம்பி.. போ..
பின்னே திரும்பி பாரு..
சத்தம் கேட்டு திரும்பினேன்..
சங்கடம் நீங்க ,
சந்தோசம் பொங்க
கூட்டத்தோடு..கூட்டமாய்
என்னோடு அல்ல அவர்கள் !
அவர்களோடு நான்..