குழந்தைப் பாடல்.9 (தொ.கா .பெட்டி )

9))தொ.கா.பெட்டி.
.
தொலைக் காட்சிப் பெட்டியாம்,
தூரந் தொலைத்த பெட்டியாம்.
எங்கிருந்தோ காட்டுவதை
இங்கே காட்டும் பெட்டியாம்.

வண்ண காட்சி பெட்டியாம்,
கண்டு மகிழும் பெட்டியாம்,
வனங்காடு மலையெல்லாம்,,
விலங்குந் தெரியும் பெட்டியாம்.

பாட்டுப் பாடும் பெட்டியாம்
பாட்ம் சொல்லும் பெட்டியாம்.
ஆட்டம் ஆடும் காட்சிகள்,
அருகே காணும் பெட்டியாம்.

கதை கூறும் பெட்டியாம்,
கருத்துக் கேட்கும் பெட்டியாம்.
விளையாட்டுப் போட்டிகள்
வீட்டில் பார்ககும் பெட்டியாம்.

பொம்மை காட்டும் பெட்டியாம்,
புதுமை பார்க்கும் பெட்டியாம்,,
நாட்டு நடப்புச் செய்திகள்
நேரே தரும் பெட்டியாம்.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (11-Mar-13, 4:29 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 122

மேலே