சில நேரங்களில்...நான் இப்படித்தான்.
எதையோ....
கொஞ்சம் எழுதிவிட்டேன்...
அது பிரசுரமும் ஆகிவிட்டது
ஒரு புத்தகத்தில்.
இப்போது-
நான் என்னை ஒரு
படைப்பாளியாய்....
பீற்றிக் கொள்ளத் துவங்குகிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாய்...
என் பீற்றல்கள் அதிகமாகி...
உனக்கும் போதிக்கும் தகுதி
எனக்கு வந்துவிட்டதாய்...
நம்பத் துவங்குகிறேன்.
மெல்ல..மெல்லத் தீவிரமாகின்றன
என் தாக்குதல்கள்...உன் மேல்
நீ விரும்பாவிடினும்.
என்னைச் சீண்டாமல் நீ விலகிச் சென்றாலும்...
நான் வலம் வரத்துவங்குவேன்...
படைப்பாளியின் முகமூடியோடு...
உனக்கும்...உன் கடவுளுக்கும்
சேர்த்து போதித்த படி.