தொழிலாளி


விடியலை நோக்கி
விழி தொலைக்காதவன்,
உழைத்து உழைத்தே
விடியலை தேடுபவன்.

பிறர் உழைப்பில்
பிழைக்க பிடிக்காதவன்,
உழைப்பதற்காகவே உயர
துடிப்பவன்.

அமைதி மாளிகையில்
குடியானவன்,
குடிசை வாசியாய்
அழகானவன்.

உழைப்புக்கு மட்டுமே
முதலானவன்,
பிறர் உழைப்பில்
ஒன்றும் திண்ணாதவன்.

எழுதியவர் : பாலரசு (22-Nov-10, 5:27 pm)
சேர்த்தது : Balarasu
பார்வை : 2464

மேலே