நீ மற்றும் நான்....

விரல்களால் பேசும்
வித்தகன் நீ......
விழிமூடி ரசிக்கும்
சிறு பிள்ளை நான் .....

சிரிக்க வைத்தே
சிலிர்க்க வைக்கும்
சிறுபிள்ளை நீ .....

சிறகை போலே
பறந்து செல்லும்
தென்றலாய் நான்....

என் மணித்துளிகளை
பனித்துளிகலாக்கி
விளையாடும்
வெண்புறா நீ ....

உன் வார்த்தைகளுக்கு மட்டும்
தலையசைக்கும்
தஞ்சாவூர் பதுமை
நான்.....

என் அகராதி
வார்த்தைக்கெல்லாம்
அர்த்தமாய் நீ ....

உன் மனமெல்லாம்
சுற்றித்திரியும்
சிறு பெண்ணாய் நான்...

என் சிணுங்கள்களுக்கெல்லாம்
சிம்பனியாய் நீ...

உன் இதழ்களுக்கு
மட்டும் சங்கீதமாய்
நான்....

நம் இதயமெல்லாம்
பரவிச்செல்லும்
இன்பமான
எதிரொலியாய் நாம்...

அலை பேசி
அழைப்பிற்கிடையில்
தவழ்ந்து செல்லும்
புன்னகையாய் நாம்.....

எழுதியவர் : சங்கீதா செந்தில் (16-Mar-13, 1:10 pm)
Tanglish : nee matrum naan
பார்வை : 96

மேலே