புத்தி தெளிந்தது..

தண்ணீர் விட்டுழுதால்
தரிசுங்கழனியாகும்.
கண்ணீர் விட்டழுதால்
கல்நெஞ்சுங்கலங்கும்..
பன்னீரைச் சாற்றினேன்
பகவதியைக் கெஞ்சினேன்...
செந்நீருங் கொட்டவோ
சின்னவளைக் கேளென்றேன்..

"ஒருதலைக் காதலடா
ஒரு நாளுங் கூடாது
இருதலைக் காதல் வர
ஏற்றவளைத் தேர்வு செய்.
வீணாக உளையாதே
வெட்டியாய் அலையாதே
எட்டாத பழத்திற்கு
கொட்டாவி விடாதே"

என்றே பகவதியும்
எடுத்துச் சொன்னாள்.
புத்தியும் தெளிந்தது
புத்துணர்வுமுற்றேனே..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (16-Mar-13, 9:49 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 102

மேலே