கருப்பு வெள்ளை (1)
திடீரென்று ஏயற்ப்பட்ட எண்ண ஓட்டத்தில் தூக்கம் கலைந்தது . காலை நீட்டி இழுத்தவாறு ஒரு சோம்பல் முறிப்பு . சுற்றும் முற்றும் ஒரு பார்வை வீசியவாறு....
' இவ்... இவ... நேரமாச்சோ...இல்லையே பொழுது கூட விடியல ...அதுக்குள்ள....அங்க என்ன சத்தம்... யாரது? ம்..பெரிய மாமாவா. இவருக்கு இதான் வேலை காலங்காத்தால எழுந்துருச்சு ரேடியோவ நோட்றதே வேல.. மொதல இந்த ரேடியோவுக்கு ஒரு வழி பண்ணனும் . உள்ள உட்க்கர்த்து கிட்டு யார் யாரோ ? பேசிகிட்டே இருக்காங்க ! இவங்க எல்லாம் தூங்கவே மாட்டங்களோ !!
எய் யாரா அது எய் நில்லு...நில்லுடா..இவன் யாரு புதுசா! நிக்கமாற்றன். எங்க போறான் பின்னாடியே போயி பார்ப்போம் . என்ன அப்பா கிட்ட போறான் !! எதோ பேசுறானே தெரிஞ்சவன் போல . நம்மக்கு ஏன் வம்பு ? அப்புறம் சனியென் விட்டுக்குள்ள யாராச்சையும் வர விடுதா? பின்னாடியே தொங்கி கிட்டு இது பன்ற இம்சையலா யாரும் விட்டுக்கு வர்றதே இல்லன்னு கத்துவார்...நான் என்ன பண்ணிட்டேன் வர்றவங்க கிட்ட நாலு வார்த்த விசாரிக்க கூடாத என்ன ??
அது என்ன சித்தப்பாவும் எழுந்துடரே ... பின்னாடி சித்தி கைல பாப்பா ... இவ எல்லாம் எப்படி எழுந்துச்சா?... நெசமாவே நேரமாச்சோ..அக்கா ! அக்கா!! என்ன நிக்கமட்ரா.. கண்ணுல என்னமோ சிக்கனல் காட்டிட்டு போராளே..ஒன்னும் புரியலையே..ஆமாம் இந்த பொண்ணுங்க மனசு புரிஞ்சுக்குறது ரொம்ப கஷ்டம் தான்.
இவ கிட்ட என்ன கேட்டுகிட்டு நாம கோபி கிட்ட போய் கேட்போம்..அவன் தான் நம்மாளு ! நாம இல்லாம ஒரு வேலையும் செய்ய மாட்டன் . நடக்க முடியுதா ஒரே பாத்திரமா போட்டு வச்சிருக்கானுங்க ... காலங்காத்தால இத கழுவி கவுத்த வேற இடம் கிடைக்கலையா..இவங்க நடுவுட்டுல அங்க இங்க சாமான போட்டு வைக்க வேண்டியது தெரியாம தட்டி விட்டுடா நம்மாலா போட்டு அடிக்க வேண்டியது .. சின்ன பையன்! சின்ன பையன்னு சொல்லி நம்மள சொல்லிட்டு பெரியவங்க இப்படித்தான் நடந்துக்குவாங்க .. சின்ன பையன்களுக்கு இருக்குற பொறுப்பு கூட அவங்களுக்கு இல்ல.
வர வர இந்த மாடி படி ஏற எவ்வளவு சிரமமா இருக்கு ... வயசாகிடுச்சோ ? இல்ல இல்ல நான் சின்ன பையன் தான் என்ன இவனையும் காணோம் . கோபி! கோபி !! இவனும் எழுந்துடனா .. எங்க அவன் ..ஆமாம் நேரமாச்சு ரொம்ப நேரமாச்சு ... இந்த வீட்டுல எனக்கு தேறியமா என்னமோ என்னவோ நடக்குது ..கீழ போயி பார்ப்போம் ... அதோ! அம்மா பக்கத்துல கோபி என்ன புது துணி போடுருக்கன் ..இல்ல இல்ல எல்லாரும் புது துணி போட்ருக்காங்க ...அப்பா, அம்மா,சித்தப்பா,சித்தி அந்த பாப்ப கூட புதுத் துணி!.. என்ன நடக்குது இங்க ?.. என்ன விட்டுட்டு ...இல்ல இல்ல .. ..'
சற்றென்று ஒரு பிரம்பு அடி ..அலறல் சத்தம் ... கூடவே " எவ்வளவு தரம் சொல்றது..இத உள்ள விடதேனு ..நாய தூக்கி நடு வீட்டுல வைக்கிறதே பொறுக்கல இப்போ அடுப்படி குள்ளேயும் விட்டுடுங்க வெளங்கிடும் பொங்குறத பார்த்துட்டு ஜொள்ளு வடிஞ்சுகிட்டே இருக்கும் . கறுமம்"
----தொடரும் ....
a