தடையைத் தாண்டி ......

நேரமாயிடுச்சே! வெகுவேகமாக நடந்தாள். தரையும் கூட தகர்ந்து விடும் போலிருந்தது அவள் நடையில்... வழியில் கண்டவர்களையும் காணாத ஓட்டத்தில் பறந்தாள்.
அம்மா தாயே! புண்ணியவதி பசிக்குதும்மா தாயே!! என்று எதிரில் வந்த கோடீஸ்வரனையும் தன் கண் ஓரத்தே கவனித்த அவள்....
அச்சச்சோ!! நேரமில்லையே, மின்னலென பாய்ந்தாள்.
அப்பாடா, ஹாஸ்பிடல் வந்தாச்சு. உள்ளே சென்றவள் பையைக் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டினாள். தன் ஆடைகளைச் சரி செய்தவளாய்...
தனக்காக காத்திருக்கும் அகிலாவை நெருங்கி இரவு நன்றாக தூங்கினாய்யாம்மா என்று விசாரித்து கொண்டே சென்றவள்...
துரை ஐயா, எப்படியிருக்கீங்க? என்றாள்.
அம்மா! வலிக்குதே என்ற அலறலின் ஓசை எழுப்பும் கட்டிலைக் கூர்ந்து பார்த்தாள்.
தினம் தினம் படும்பாட்டை நான் என்று ஒழிப்பேனோ...!!!
அம்மா......! என்ற கதறலின் ஒலி தான் அது.
என்னம்மா வலிக்கிறதா?
இதோ வரேன்னு..... தாயாகவே மாறி அத்தாயின் வலியுடன் கைக்குலுக்கி பரிமாறிக் கொள்ள ஆவலாய் சென்றாள்.
வந்து விட்டாயாம்மா..... என்றது அக்குரல்.

எழுதியவர் : Loka (18-Mar-13, 2:39 pm)
பார்வை : 220

மேலே