கவிதை எழுத நினைத்ததில்லை

பாரதியின் கவிதைகள்
எனக்கு கவிதைகள் தரவில்லை
கனவுகளை தந்தன

உலகம் பொய் என்ற
தத்துவங்களை நம்பவில்லை
என் கனவுகளுக்காக.

நினைவு பிறந்த போது
கனவுகளும் உடன்பிறந்தன.
காட்சிகளால் கனவுகளும்,
கனவுகளால் காட்சிகளும்
மாறுவது உண்மை.

பின்பொரு நாள் வந்தது
கட்சியையும் கனவையும்
மீறிய உண்மைநிலை.
நிச்சயமாக சொல்லுவேன்,
என் காட்சிகளைவிட
கனவுகள் இனித்தன.

கனவுகள் பொய் என்றால்
காட்சிகளும் பொய்.
கனவுக்கும் காட்சிக்கும்
நடந்த போட்டியில்
கனவுகள் தோற்றன.
கனவு கோட்டைகளின்
இடிபாடுகளில்
இனிமையான ஒரு நட்பு!
அதனால் பிறந்தது இக்கவிதை
இதுவரை கவிதை எழுத நினைத்ததில்லை
கனவுகள் இறப்பதில்லை
அவை கவிதைகளாய் மாறும்.

எழுதியவர் : தினேஷ் ராஜு (19-Mar-13, 6:27 pm)
சேர்த்தது : Dinesh Raju
பார்வை : 102

மேலே