கேட்கமறந்த கேள்விகள்...?

அன்னை அவளிடம் கேட்க மறந்தேன்
எனக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும்
இன்னும் ஏன் என்னை குழந்தையாகவே
கொஞ்சுகிறாய் என்று....?

தந்தையிடம் கேட்க மறந்தேன்
இன்று நானொரு குழந்தைக்கு தந்தை
இன்னும் ஏன் நீ என்னை
கைத்தடியாய் தாங்குகிறாய் என்று......?

இன்னும் காதலிக்கும் காதலியிடம்
கேட்க மறந்துவிட்டேன்...
எப்போதுதான் நம் காதல்
நிறைவு பெறும் என்று.....?

அன்புத்தொல்லை தரும்
அருமை மனைவியிடம்
கேட்க மறந்தேன்......
இறக்கும் வரை
இப்படித்தான் இருப்பாயா என்று....?

பெற்ற பிள்ளைகளிடம்
கேட்க மறந்தேன்..........
எப்போதுதான் என்னை உங்கள்
தந்தையாக நேசிப்பீர்கள் என்று....?

அங்கே வந்த அரசியல்வாதியிடம்
அதுவும் கேட்க மறந்தேன்.....
எப்போதுதான் நீங்கள்
மக்களுக்கு உதவும் மாமனிதர் ஆவீர் என்று...?

அங்கே வந்த மதவாதியிடம்
அதுவும் கேட்க மறந்தேன்...
எப்போதுதான் நீங்கள்
மனிதர்களாக மாறுவீர்கள் என்று....?

அங்கே வந்த கவிஞரிடம்
அதுவும் கேட்க மறந்தேன்
எப்போதுதான் நீங்கள்
காதலைப் பாடுவதை நிறுத்திவிட்டு
மனிதர்களைப் பாடுவீர்கள் என்று....?

கடைசியில்...
என்னையே கேட்க மறந்தேன்
ஏன் இப்படி எழுத்தாளனாய் மாறி
நல்லவைகள் எழுதுவதை விடுத்து
அல்லவைகளை எழுதிக்கொண்டு என்று?
..........................................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (19-Mar-13, 6:35 pm)
பார்வை : 116

மேலே