அனைவரும் தமிழ் கற்போம் முன்னோட்டம்.

தமிழ் மொழி செம்மொழிதான்.
கல்தோன்றி மண்தோன்றா காலந்தொட்டே
தமிழர்களால் பேசப்படும் மொழிதான்.

அதில்
அகத்தியம், தொல்காப்பியயம்,
பதினெங்கீழ்கணக்கு நூல்கள்,
பத்துப்பாடு, எட்டுத்தொகை,
குறுந்தொகை, ஐம்பெரும் காப்பியங்கள்,
கம்ப்ப ராமாயாணம், வில்லிபுத்தூரார் பாரதம்.
திருக்குறள்,. ஔவை மொழிகள்,
பக்தி பதிகங்கள், வெண்பாக்கள்,
விடுதலை இலக்கியங்கள், வரலாற்று நிகழ்வுரைகள்,
கூத்துப்பாட்டுகள், புரட்சி கீதங்கள், உரைநடை கவிதைகள்,

திரைப்பட தத்துவப்பாடல்கள், பஞ்சதந்திரக் கதைகள்

உரைநடை இலக்கியங்கள், பயணக்கட்டுரைகள்
கதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள்,
இலக்கண வரையறைகள், அரசியல் முழக்கங்கள்,
சிலேடை இலக்கியங்கள், பொழுதுபோக்குக்கான
திரை நாடகங்கள், மேடைநாடகங்கள்,
துள்ளலிசைப் பாடல்கள், பாமர இலக்கியங்கள்,
கிராமிய மொழிவழிகள், வழக்கு சொல் பழமொழிகள்

இன்னும் பிற இன்னும் பல சொல்லில் அடங்கா
எழுத்தில் நீளும் பட்டியலில் இடம்பெற தகுதியான
பலப்பல படைப்புகள் சான்றளிக்கும் வரலாற்று சேர்க்கைகளாக
அரிய தொகுப்பு சேர்க்கையாக, கிடங்கு புதையலாக
மனதிற்கு நிறைவளிக்கும் வகையில்
உள்ளன என்பது உன்னதமான உண்மையே!

மேலே குறிப்பிட்ட மற்றும் சாயல் படும் அனைத்துமே
வரலாற்று பொருளாகிய
அடையாளச் சின்னங்கள்!

இவற்றில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர இயலாது!
ஆம்.
வள்ளுவருக்கு சிலைதானே வைக்க முடியும்.
வள்ளுவத்தில் திருத்தமா கொண்டு வர முடியும்?

வள்ளுவத்தை படிப்பதால் எனக்கு வாழ்வில் வழிகிடைக்கும்!
ஆனால் வள்ளுவத்தை போல இன்னொரு படைப்பு
எக்காலத்திலும் எடுபடப்போவதில்லையே!

எனவே கடந்த கால தமிழ் என்பது ஒரு அடையாளச் சின்னமே!
அதில் பெருமைக் கொள்கிறோம். மன நிறைவு கொள்வோம்.

ஆயினும் தற்காலத்திய தமிழ் வெளிப்பாடு மிகவும் மாறுபட்டது,

ஆம்

அவை இதோ பட்டியலில்:

இணைய தமிழ், எழுத்துரு தமிழ்,
கணினித் தமிழ், முகநூல் தமிழ்,
குறுநகை தமிழ், குறுஞ்செய்தி தமிழ்,
ஹைக்கூ தமிழ், ஒரு பக்க கதை,

அரசியல் கட்டுரைகள், அரசிதழ் ஆணைகள்,
சிலவரிச் செய்திகள், முணுமுணுப்பு பாடல்கள்,
குத்தாட்ட இசை வரிகள், தத்துவ மேற்கோள்கள்,
இறைவழி தோத்திரங்கள், அர்ப்பணிப்பு பாசுரங்கள்
உச்சரிப்பு அர்ச்சனைகள்,

அவசர மேற்கோள்கள், கருத்து பரிமாற்றங்கள்,
கடிதங்கள், மின்னுரு வரித்தொடர்கள்,
சிந்தனை சிதறல்கள், சிதறிய எண்ணங்கள்,
பேச்சு மொழி கலப்படங்கள், நேரடி அலைத்தொடர்கள்,

சின்னத்திரை தொடர் உரைகள், சிலவற்றில் பாடல்கள்
மொழிபெயர்ப்பு பின் குரல்கள், பின்னணிப் பாடல்கள்,
இன்னும்
சிந்தனையில் இங்கு உதிக்காத சிலபல அற்புதங்கள்

இவை எல்லாம்தானே தற்கால இலக்கியங்கள்.

இவைதானே இனிவரும் சந்ததிகளுக்கும்
நாம் விட்டு செல்ல இருக்கும்
தமிழ்த்தோன்றல் இலக்கியங்கள்.

ஆகவே
தமிழுக்கு சேவை செய்ய புறப்பட்ட தருணத்தில்,
இவற்றின் வளர்ச்சியில் சீரமைப்பு செய்வதற்கு
மனம் விரும்பும் நோக்கில் படைப்புகள் தரக் காத்திருக்கும்

பரந்த உள்ளங்களுக்கு கைவாகு கொடுத்திடும்
ஒரு சில கோணத்தில் தமிழில் தெளிவு பெறும்

திசை நோக்கும் பயணமாக இவற்றின் மீதே
இலக்கியம் படைப்போமே. வாரீர் அன்பர்களே!

அன்றாட வழக்கில் வரும் அழகிய தமிழ்ச்சொற்களில்
கலப்படம் கொண்டு தடுமாற்றம் செய்யும் சில
தள்ளாட்டச் சொற்களையே பதம் பிரித்து கற்போமே!

வாருங்கள் அன்பர்களே.
இலக்கியம் படைக்கும் வழிவகை செய்வோமே!

ஆம்.
சரித்திரத் தமிழ் படித்து சாதிப்பது என்பது
தமிழ் ஆசிரியர், பேராசிரியர், விரிவுரையாளர்,
முனைவர், மேதகு தமிழ் அறிஞர் ஆகிடலாம்.

இவற்றால் தமிழை
சரித்திரத்தில் மட்டுமே உருக்குலையாமல்
வைத்திருக்க இயலும் அல்லவோ?


ஆயினும்
நடமுறை தமிழில் சாதிப்பது என்பது

எழுத்தாளர், கவிஞர், படைப்பாளி, கட்டுரையாளர்,
கருத்து சொல்பவர், ஆராய்ச்சியாளர்,
தமிழை வளர்ப்பவர், தமிழ் ஆர்வலர் என்று ஏதாவது
ஒரு நடைமுறை தகுதி கொள்வதுதானே.

வழக்கு சொற்களை பிழையின்றி அனுசரித்தாலே
எதிர்கால தமிழை
நாம்
இலக்கு நோக்கி செலுத்தியதாகும் அல்லவோ!

அந்த திசையில் தான்
இந்த
அனைவரும் தமிழ் கற்போம்
எனும் ஒரு இலக்கியப் படைப்பும்.

தொடரும் ......




(ஏதோ தெரிஞ்சதை எழுதறேனுங்க.... யாரும் என் தோல உரிச்சுப்புடாதீக.....)

எழுதியவர் : மங்காத்தா (21-Mar-13, 6:37 am)
பார்வை : 441

மேலே