நீயும் உணர்ந்து கொள்!..
![](https://eluthu.com/images/loading.gif)
யாரும் கண்டிராத
என் மன மாளிகையில்
நீ ஆனதால் நுழையவிட்டேன்
ஆடினாய் பாடினாய்..
தடங்களை பதித்தாய்..
தடயங்களை விட்டுச்சென்றாய்..
அது இன்று உனக்கென
ஒரு மாளிகையாய் ஆனபின்
தங்க மறுக்கின்றாய்..
புரிந்துகொண்டேன்
ஆடி பாடி விளையாடி
தடங்களை தடயங்களை
விட்டுச்செல்ல மனமென்ன
விலைமாந்தர் விடுதியா?..
மணமாகி மனமாக காத்திருக்கும்
ஒருவனின் ஒருத்தியின் சிம்மாசனம்
உன் மனம்..
யாரும் கண்டிராத உன் மனமாளிகையில்
தாரத்திற்க்காய் இடம் ஒதுக்கு,
அழகுபார், உன்னை ஆளவிடு
உன் சாம்ராஜ்ஜியம் செழிக்கும்..
மணத்தை மறந்த
இக்காலப் பெண்களுக்கு
மனமாளிகை எதற்கு?..
அவளை உள் நுழையவிட்டால்
உன் மன மாளிகையும்
அந்த ஆற்றோரத்தில்
அனைவரும் வந்து
ஆடிபாடி, விளையாடி
தடங்களை தடயங்களை
பதித்துச்செல்லும்
இன்னும் ஒரு சமாதியாகும்..
நீயும் உணர்ந்து கொள்!..