ஒரு சிப்பி மூன்று முத்து
கலாமன்றம் தெரிவு செய்த சிப்பி – ரி.எ.விமல்
இடம் : மூதூர் - இலங்கை
பிறந்த தேதி : 07-Jan-1983
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 11-Jul-2012
பார்த்தவர்கள் : 64
புள்ளி : 17
எழுத்து தளத்தில் கலாமன்றம் தொடங்கும் புதிய செயற் திட்டம் “ஒரு சிப்பி மூன்று முத்து” இதில் அருமையான படைப்புக்களை எழுதும் படைப்பாளிகளில் ஒருவர் மேடைக்கு அழைக்கப் படுவார்.
அவரின் படைப்புக்களை பார்த்து கருத்து சொல்லி அவரை பெருமைப்படுத்துவது உங்கள் கடமை.
இந்த எழுத்து தளத்தில் எழுதும் படைப்பாளிகளில் எத்தனை நல்ல கவிஞர்கள் இலை மறைத்த கனிகளாய் இருக்கிறார்கள் என்பது இந்த கவிஞனின் வரிகளைப் பார்க்கும் போது கண்டுகொண்டேன்.
விமல் ஈழ நாட்டின் மூதூர் என்ற ஊரை தனது ஊராக குறிப்பிட்டு இருக்கிறார். கவிதையே இல்லாத எத்தனையோ “கவிஞர்களின்” படைப்புக்களில் பொழியும் கருத்து மழையோ புள்ளி மழையோ இந்த சிறுவனின் காட்டில் பொழியவே இல்லை. வெறும் 17 ஆக்கங்களை மட்டுமே தந்திருக்கும் இந்த படைப்பாளி தனது எழுத்து தள பயணத்தை இவ்வளவு மெதுவாக கொண்டு செல்ல காரணம் உங்களின் புறக்கணிப்பு அல்லது பாராமுகம் கூட காரணமாக இருக்கலாம் அல்லவா ? கலாமன்றத்தின் மூலமாக இச்சிறுவனை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்வதில் கலாமன்றம் மன சந்தோசம் பெறுகிறது.
அதிகம் எழுத தேவையில்லை.கலாமன்றத்தின் நடவடிக்கைகளை விரும்புவோர் நிச்சயம் இந்த படைப்பாளியின் எல்லா படைப்புக்களையும் வாசித்து அந்த படைப்புக்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
மூன்று முத்துக்கள் கீழே...
***********************************************************
சட்டங்களின் சாகசங்கள்...!!
கவிதை எண் - 112494
சமகால நடவடிக்கைகளைப் பிரமாதமாக எழுதி இருக்கிறார்...
ஒரு சாமான்ய குடிமகனை எப்படி சமகால அரசியல் சட்டதிட்ட நீரோட்டம் அடித்துச் செல்கிறது என்பதன் சரியான வெளிப்பாடாக இருக்கிறது இந்த கவிதை.
மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் தம்பி விமல் ! அந்த படைப்பில் மேற்கோள் காட்ட ஒரு பந்தி இதோ...
"நான் சொல்லவதெல்லாம் உண்மை” என
தன்மீது அடித்துச்சொன்ன
பொய்யை எண்ணி எண்ணியே
இளைத்துப்போயின
பைபிள்களும்
பகவத்கீதைகளும்... “
*****************************************
வேண்டாம் இந்த நகரம்(நரகம்)....!!
கவிதை எண் - 85851
எல்லோருக்கும் எல்லா வசதிகளும் வேண்டும் ஆனால் எல்லாமே கண்ணுக்கும், உடலுக்கும், மனதிற்கும், பண்பாட்டிற்கும் சௌபாக்யம் தர வேண்டும் என்ற காரணம் தான் நகரங்களை நரகங்களாக பார்க்க வைக்கிறது பலருக்கு. இந்த கவிஞரும் விதிவிலக்காகவில்லை. இந்த படைப்பில் ஒரு அழகற்ற செயலைக் கூட எவ்வளவு அழகாக ஒரு கவிஞனுக்கு சொல்ல முடியும் என்பதை கவிஞர் நிரூபிக்கிறார் இப்படி –
“மின்கம்ப
நிழல் இருட்டைக்கூட
விட்டுவைக்காமல்
சுற்றம் மறந்து
கை பற்றும், வாயொற்றும்
வாலிபக்கூட்டம்..”
**************************************************************************
எங்கே போனாய் மழையே...?
கவிதை எண் - 85855
மழை எப்படி கண்ணீர்மழை பொழிய வைக்கிறது என்பதாகு இந்த படைப்பு ஒன்றே போதுமே. அட்டகாசமான வரிகள்.மிக மிக அருமையான வரிகள்...
“அறுவடை அஸ்தமனம் ஆகிப்போனதால்
அடுப்பங்கரைகூட
பூனைகளின்
அரண்மனையாகிப்போனது “
----------------------------------
இவரின் எல்லா படைப்புக்களுமே மிக அருமையான முறையில் எழுதப் பட்டு இருக்கிறது. இங்கு குறிப்பிட்ட படைப்புக்களை மட்டும் பார்க்காமல் அவரின் எல்லா படைப்புக்களையும் வாசிக்கும் உங்களுக்கு கலாமன்றத்தின் நன்றிகள் என்றுமுண்டு.

